Deprecated: Function mysql_numrows() is deprecated in /home2/elukathi/public_html/NewsMain.php on line 8
Welcome elukathir.lk
mainelu


12 வயது சிறுமி மீது பாலியல் வன்புனர்வு புரிந்தவருக்கு 15 வருட கடுழிய சிறைத்தண்டனை

|Wednesday 13th September 2017|Security| Page Views : 29

12 வயது சிறுமி மீது பாலியல் வன்புனர்வு புரிந்தவருக்கு 15 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

12 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புனர்வு புரிந்த குற்றத்திற்காக 53 வயதுடைய புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனையை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் அவர்களினால் (11.09) நேற்று முன்தினம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த 09.09.2012 புதுக்குடியிருப்பு 02ம் வட்டாரம் கோம்பாவில் பகுதியில் தனது மனைவியின் சகோதரியின் மகளின் மகளான 12 வயதுடைய சிறுமி ஒருவரை சந்தியாப்பிள்ளை மார்க் என்ற 57வயதுடைய உறவுமுறையானவர் பாலியல் வன்புனர்வுக் குற்றம் புரிந்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தாயார் மேற்கொண்ட முறைப்பாட்டினை அடுத்து குறித்த நபரை கைது செய்த புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியிருந்தனர்.

வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்ததுடன் குறித்த நபர் ஆறு மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 29.05.2017 அன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகர்வு பத்திரம் வவுனியா மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

சம்பவம் தொடர்பான சாட்சியங்கள் நெறிப்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் தீர்ப்பிற்கு திகதியிடப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் அவர்களினால்

எதிரிக்கெதிரான குற்றச்சாட்டிற்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபா இரண்டு இலட்சம் நஷ்டஈடு செலுத்துமாறும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

அதைச் செலுத்தத் தவறின் மேலும் இரண்டு வருட கடுழிய சிறை அனுபவிக்க வேண்டும் எனவும் தண்டப்பணமாக

ரூபா பத்தாயிரத்தையும் செலுத்துமாறும் அதைச் செலுத்தத் தவறின் ஒரு மாதம் சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் அத் தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கினை அரச தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கினை நெறிப்படுத்தியிருந்தார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.