head


வட கொரிய தலைவரின் சகோதரி தென் கொரியா சென்றடைந்தார்!

|Sat 10th Feb 2018 09.35AM|General| Page Views : 40

வட கொரியாவின் உயரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜாங் தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பியோங்சாங் சென்றடைந்துள்ளார்.

1950-1953 இல் நடைபெற்ற கொரியப் போருக்குப் பின், தென்கொரியாவிற்கு செல்லும் வட கொரியாவை ஆளும் குடும்பத்தின் முதல் நேரடி உறுப்பினர் கிம் யோ-ஜாங் ஆவார்.

கடந்த ஆண்டு கட்சியின் போலிட்பீரோவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர் கட்சியின் மூத்த உறுப்பினரான கிம் யோ-ஜாங் மற்றும் வட கொரியாவின் அரசு விழாக்களின் துறைத் தலைவரான கிம் யோங்-நம் ஆகிய இருவரும், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பியோங்சாங் சென்றடைந்தார்கள்.

வட கொரியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களில் இருக்கும் தொடர்புகள் காரணமாக கிம் யோ-ஜாங் அமெரிக்காவின் கறுப்புப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

30 வயதான கிம் யோ-ஜாங், மறைந்த தலைவர் கிம் ஜாங்-இல்லின் இளைய மகளும், கிம் ஜாங்-உன்னின் சகோதரியும் ஆவார்.

கிம் ஜாங்-உன்னை விட 4 ஆண்டுகள் இளையவரான இவர், தன்னுடைய சகோதரருக்கு மிகவும் நெருங்கியவர் என்று கூறப்படுகிறது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வட கொரியா கலந்து கொள்வது இருதரப்பு உறவுகளில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் என்று கருதப்படுகிறது. தென் கொரிய அதிபர் மூன் ஜியே-இன்னிற்கு சகோதரி மூலமாக முக்கியமான செய்திகளை வடகொரிய அதிபர் அனுப்பலாம் என்று பரவலாக நம்பப்படுகிறது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.