head


சுதந்திர பாலஸ்தீனம் உதயமாகும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

|Sun 11th Feb 2018 09.09AM|General| Page Views : 38

சுதந்திர பாலஸ்தீனம் விரைவில் உதயமாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய 3 நாடுகள் பயணத்தை பிரதமர் மோடி நேற்று முன் தினம் தொடங்கினார்.

பாலஸ்தீனம் செல்வதற்காக அவர் முதலில் ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார். அங்கு அந்த நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லாவை சந்தித்துப் பேசினார்.

பின்னர் காலை ஜோர்டான் அரசு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி பாலஸ்தீனத்தின் ரமல்லா நகருக்கு சென்றார்.

மோடியின் ஹெலிகாப்டருக்கு இஸ்ரேல் விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பாக அரணாக சென்றன.

ரமல்லா ஹெலிபேடில் தரையிறங்கிய பிரதமர் நரேந்திர மோடியை பாலஸ்தீன பிரதமர் ரமி ஹம்துல்லா வரவேற்றார்.

அங்கிருந்து பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத்தின் நினைவிடத்துக்கு சென்ற மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அதிபர் மாளிகைக்கு சென்றார்.

அங்கு அவரை அதிபர் மெஹமூத் அப்பாஸ் வரவேற்றார்.

பின்னர் அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாலஸ்தீனத்தின் மிக உயரிய கிராண்ட் காலர் விருதினை பிரதமர் மோடிக்கு அதிபர் அப்பாஸ் வழங்கினார்.

இருதலைவர்களும் சந்தித்துப் பேசிய பிறகு நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: பாலஸ்தீன மக்களின் நலனுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்.

இந்திய அரசு சார்பில் ரமல்லாவில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுகிறது. இந்த பூங்கா திறக்கப்படும்போது பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

பாலஸ்தீன மக்களின் சுகாதாரம், உள்கட்டமைப்பு, பெண்கள் முன்னேற்ற திட்டங்களில் இந்தியா முதலீடு செய்யும்.

இந்த பிராந்தியத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம்.

விரைவில் சுதந்திர பாலஸ்தீனம் உருவாகும் என்று நம்புகிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார். .
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.