head


இஸ்ரேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய சிரியா!

|Sun 11th Feb 2018 09.18AM|Defence| Page Views : 33

இஸ்ரேல் போர் விமானம் ஒன்றை சிரியா சுட்டு வீழ்த்தியுள்ளது.

சிரியாவின் விமானப் பாதுகாப்பு அமைப்பையும், அந்நாட்டில் உள்ள இரானிய இலக்குகளையும் தாக்குவதற்காகச் சென்ற இஸ்ரேலின் ஜெட் போர் விமானம் ஒன்று சிரியாவின் விமான எதிர்ப்புத் தாக்குதல் வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

பாராசூட் மூலம் அந்த விமானத்தில் இருந்து தப்பிய விமானிகள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் தற்போதைய நிலை தெளிவாகத் தெரியவில்லை.

இரான் நாட்டுக்கு சொந்தமான ஆளில்லா விமானம் ஒன்று இஸ்ரேலைத் தாக்கும் நோக்கில் சிரியாவில் இருந்து ஏவப்பட்டபின், இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கியது.

முன்னதாக, அந்த இரான் ஆளில்லா விமானம் நடுவானில் தடுத்து அழிக்கப்பட்டது.

சிரியாவில் இருந்து தாக்குதலுக்காக ஏவப்பட்ட அந்த ஆளில்லா விமானம் தடுத்து அழிக்கப்படும்வரை கண்காணிக்கப்பட்டு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலுக்கு பின்னரே தாங்கள் அந்த விமானத்தைச் சுட்டதாக சிரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது வழக்கமானதுதான்.

எனினும் இஸ்ரேல் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்படுவது தீவிரமான மோதல் போக்கை காட்டுகிறது," என்று பிபிசியின் மத்திய கிழக்கு செய்தியாளர் டாம் பேட்மேன் கூறுகிறார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.