head


போலீஸுக்கு உதவும் மூக்குக் கண்ணாடி

|Sun 11th Feb 2018 09.30AM|Defence| Page Views : 35

மனித முகங்களை இனம் காணக்கூடிய தொழில்நுட்பத்துடன் கூடிய மூக்கு கண்ணாடியை அணிந்து சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க சீனப் போலீஸார் ஆரம்பித்துள்ளனர் இந்த மூக்கு கண்ணாடி சந்தேகத்திற்குரிய மனித முகங்கள் பதியப்பட்டு இருக்கும் கணினித் தரவுகளோடு இணைக்கப்பட்டிருக்கும்.

இதனால் கூட்டத்தை பார்க்கும் போது சந்தேகத்திற்குரிய நபரை சுலபமாக அடையாளம் கண்டுக் கொள்ள முடியும். சீனா நகரமான ட்செங்சௌவில் சந்தேகத்திற்குரிய ஏழு பேரை கைது செய்ய இந்த கண்ணாடி உதவியதாக சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

போலி அடையாள அட்டை பயன்படுத்திய 26 பேரையும் காவல்துறையினர் இனம்கண்டுள்ளனர்.

அரசியல் எதிர்ப்பாளர்களையும், இன சிறுபான்மையினரையும் பின்தொடர இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்றும், சர்வாதிகாரப் போக்குடைய சீன அதிகாரிகளின் கரங்களுக்கு இது வலுவூட்டும் என்றும் விமர்சகர்கள் அஞ்சுகிறார்கள்
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.