head


பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் தலையிட கோரிக்கை!

|Mon 12th Feb 2018 09.25AM|| Page Views : 35

காஷ்மீரில் சுன்ச்சுவான் ராணுவ முகாமில் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது.

இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது.

காஷ்மீரில் சுஞ்ச்வான் ராணுவ முகாமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சுர்ஜிவாலா கூறியதாவது: கடந்த 2014ம் வருடம் பா.ஜ., ஆட்சிக்கு வந்தது முதல், காஷ்மீரில் ராணுவத்தை குறிவைத்து 14 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது கவலைக்குரியது.

பிரதமர் மோடி உலகின் எந்த மூலையில் இருந்தாலும், இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, பயங்கரவாதிகள் வீழ்த்தப்படுதை உறுதி செய்வதுடன், ராணுவ வீரர்களுக்கு தேவையான உதவியை செய்ய வேண்டும். கடந்த 2008ல் மும்பையில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்த போது, அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி அதனை அரசியலாக்கினார்.

ஆனால், நாங்கள் மோடி போல், இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாக கருத்து தெரிவிக்க மாட்டோம்.

நாங்கள் அரசுடனும், ராணுவத்துடனும் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் கூறுகையில் இந்த நேரத்தில், நாம் அனைவரும் ராணுவ வீரர்களுடன் இருக்க வேண்டும்.

அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த விவகாரத்தை காங்கிரஸ் அரசியலாக்குகிறது.

ராணுவ வீரர்களின் ரத்தம் மற்றும் வியர்வையை வைத்து அரசியல் செய்யும் காங்கிரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ராணுவ முகாமில் நடக்கும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தற்போது கருத்து கூறுவது சரியாக இருக்காது. நமது வீரர்கள் பயங்கரவாதிகளை வீழ்த்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. என்றார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.