head


அபுதாபியின் முதல் இந்து கோயிலுக்கு மோடி அடிக்கல்!

|Mon 12th Feb 2018 09.30AM|General| Page Views : 38

அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றள்ள மோடி, அபுதாபியில் கட்டப்பட உள்ள முதல் இந்து கோயிலுக்கு நேற்று அடிக்கல் நாட்டினார்.

ஜோர்டான், பாலஸ்தீனம் நாடுகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அபுதாபி இளவரசர் அல் நெஹாயானுடன் ஆலோசனை நடத்தினார்.

இரு நாடுகளிடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

பின்னர் , அபுதாபியில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக அபுதாபியில் கட்டப்பட உள்ள இந்து கோயிலுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.

அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்துக் கோயில் இது என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.