head


தனித்து ஆட்சியமைக்க ஐதேக முஸ்தீபு?

|Tue 13th Feb 2018 08.10AM|| Page Views : 14

உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி பெற்றுள்ள பெரும் வெற்றியை அடுத்து, கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனித்து ஆட்சியை அமைக்கும் நடவடிக்கையில் ஐதேக இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது சிறிலங்கா சுதந்திரக் கட்சி இந்தத் தேர்தலில் படுதோல்வி கண்டுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேனவை ; சந்தித்த அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்கள், அரசியல் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்ய அழுத்தங்களைக் கொடுத்திருந்தனர்.

அதே வேளை, கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

ஐதேக அரசாங்கத்தை அமைப்பது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால் ஐதேக அரசாங்கத்தை அமைக்குமாறு ரணில் விக்கிரமசிங்கவிடம் மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பதாக பிரதமர் செயலக பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, ஐதேக அரசாங்கம் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 10 அமைச்சர்கள், ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரவும், திட்டமிட்டுள்ளனர். இன்னும் சிலர் கூட்டு எதிரணியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதேக அரசாங்கம் தொடர்பான அறிவிப்பு அடுத்த ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐதேக ஆட்சியமைத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்று முன்னர் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினரே அதற்கு ஆதரவளிப்பார்கள் என்று பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐதேக தனித்து ஆட்சியமைப்பதற்கு நாடாளுமன்றத்தில் 7 ஆசனங்களே குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.