head


இணக்கம் இல்லை - ஜனாதிபதி செயலகம் அறிக்கை!

|Tue 13th Feb 2018 08.17AM|| Page Views : 13

ஜனாதிபதி செயலக ஊடகப்பிரிவு நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அரசாங்கத்தின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்தோ, உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகங்கள் குறித்தோ, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் எந்த இணக்கப்பாடும் ஏற்படுத்தப்படவில்லை.

அத்தகைய இணப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தவறானவை என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சுதந்திரக் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகி, சுதந்திரமான ஒருவராக செயற்படும் படி அவரது ஆலோசகர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு மூத்த தலைவர் ஒருவரை நியமித்து விட்டு கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.