head


போர்க்குற்றங்களை விசாரித்த ஐ.நாவின் முன்னாள் நிபுணர் காலமானார்!

|Tue 13th Feb 2018 08.25AM|General| Page Views : 16

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்த ஐ.நா நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் சட்ட வல்லுனர், அஸ்மா ஜஹாங்கிர் மாரடைப்பினால் காலமானார் என்று பாகிஸ்தான் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

66 வயதுடைய, சட்ட வல்லுனரான, அஸ்மா ஜஹாங்கிர் ஐ.நாவின் முன்னாள் நிபுணராவார். இறுதிக்கட்டப் போரின் போது, போர்க்குற்றங்கள் இடம்பெற்றனவா என்பதைக் கண்டறிந்து,

தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த மூன்று உறுப்பினர் குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.