head


நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்த மகிந்த கோரிக்கை!

|Tue 13th Feb 2018 08.50AM|Political| Page Views : 16

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று ; முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

கொழும்பில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி பெற்ற பாரிய வெற்றியை அடுத்து மகிந்த ராஜபக்ச நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையை இந்த தற்போதைய அரசாங்கம் இழந்து விட்டது,

புதிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். உள்ளூராட்சித் தேர்தலில் ஆளும்கட்சியை எதிர்க்கட்சி ஒன்று தோற்கடித்த வரலாறு இதுவரை இலங்கை அரசியலில் இடம்பெறவில்லை. இது ஒரு வரலாற்று வெற்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.