head


இலங்கை தேயிலை தரம் தொடர்பில் மகிழ்ச்சி!

|Tue 13th Feb 2018 09.53AM|General| Page Views : 30

இலங்கையின் தேயிலை உயர்தரத்தை கொண்டிருப்பதாக ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த தேயிலை தொடர்பான ஆய்வு அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இங்கு இலங்கையின் தேயிலையின் தரம் தொடர்பில் மகிழ்ச்சி தெரிவிப்பதாக தேயிலை ஆணையாளர் ஜயந்த தெரிவித்துள்ளார்.

கடந்த 4ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த இந்த அதிகாரிகள் விவசாய பணிப்பாளர் நாயகம் இலங்கையில் சிறந்த தேயிலை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்களின் நிறுவனத்தின் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தேயிலை தொழிற்சாலைகளையும் பார்வையிட்டுள்ளனர். தேயிலை தொடர்பில் இவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டிருந்தால் இந்த ஆய்வுளின் மூலம் அவை நீங்கியிருப்பதாகம் தேயிலை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் தேயிலை தொடர்பாக இவர்கள் மேற்கொண்ட அய்வுகள் மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்ட அவர், இலங்கைக்கு ரஷ்யாவில் தேயிலை சந்தையை மேலும் விரிவுபடுத்துவதற்கு இது பெரிதும் உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இவர்கள் இலங்கை தேயிலை தொடர்பாக ரஷ்ய அரசாங்கத்திற்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.