head


அயோத்தி விவகாரத்தில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை!

|Tue 13th Feb 2018 10.15AM|Defence| Page Views : 25

அயோத்தி விவகாரம் தொடர்பாக வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வரும் 20-ம் தேதி முஸ்லிம் மதத் தலைவர்களை மீண்டும் சந்தித்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

அயோத்தி விவகாரத்தில் இந்து, முஸ்லிம் தரப்பினரிடையே சமரசம் செய்து வைக்க வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் முயற்சி செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக லக்னோவை சேர்ந்த சிஓஆர்டி அமைப்பின் இயக்குநர் அக்தர் {ஹசைன், அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரிய நிர்வாக குழு உறுப்பினர் மவுலானா சல்மான் நத்வீ உட்பட 6 பேர் அடங்கிய குழுவினர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை கடந்த 8-ம் தேதி பெங்களூருவில் சந்தித்துப் பேசினர்.

அப்போது அயோத்தி விவகாரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக வரும் 20-ம் தேதி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரும் முஸ்லிம் மதத் தலைவர்களும் லக்னோவில் மீண்டும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.