head


கொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம் – மார்ட்டி

|Sat 25th Apr 2020 08:00 AM|General| Page Views: 1

புதிய கொரோனா வைரஸ் – சார்ஸ்-CoV-2 உலகம் முழுவதும் பரவி வருகிறது. இத்தொற்று நோய் பரவும் வீதத்தை கட்டுக்குள் வைக்க உலக நாடுகள் அனைத்திலும் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

எல்லா வைரஸ்களுமே மனிதர்களை, விலங்குகளை தாக்குவதில்லை. மிகப் பெரும்பாலான வைரஸ்கள் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை மட்டுமே தாக்குகின்றன.

எல்லா நாடுகளிலுமே அன்றாட வாழ்க்கை முடங்கி சாலைகள் தெருக்கள் வெறிச்சோடியுள்ளன. இந்நிலையில் கொரோனோ வைரஸ் குறித்து பல்வேறு வதந்திகள், சதிக் கோட்பாடுகள், போலி அறிவியியல் கருத்துக்கள் மற்றும் அபத்தங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு பீதியூட்டி வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த எளிமையான அறிவியியல் அறிமுகத்தை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

வைரஸ் (உயிர்நுண்மம்) என்பது புரதங்கள், நொதிகள் மற்றும் மரபணு பொருட்களை கொண்ட மிகச்சிறிய தொற்று துகளாகும். இவை பாக்டீரியா போன்ற நுண்ணுயிகளை விட மிகச் சிறியவை. உலகில் கோடிக்கணக்கான வைரஸ்கள் உள்ளன.

இவ்வுலகிலுள்ள வைரஸ்களை வரிசையாக வைத்தால் அது நமது விண்மீன் மண்டலமான பால்வெளி மண்டலத்தின் விட்டம் சுமார் 1 இலட்சம் ஒளியாண்டுகள்களை விட நீளமாக இருக்கும். ஒரு ஒளியாண்டு என்பது 9 இலட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோமீட்டராகும்.

இதனால், கோடிக்கணக்கான வைரஸ்கள் மனிதர்களை தாக்கி அழிக்க காத்துக் கொண்டிருக்கின்றன என்று அச்சப்படத் தேவையில்லை. எல்லா வைரஸ்களுமே மனிதர்களை, விலங்குகளை தாக்குவதில்லை. மிகப் பெரும்பாலான வைரஸ்கள் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை மட்டுமே தாக்குகின்றன.

வைரஸ் தாமாக ஆற்றலை உள்வாங்கி வளரவோ அல்லது இனப்பெருக்கம் செய்யவோ திறனற்றவை. அவை இயங்குவதற்கு ஓம்புயிர்கள் (Host) தேவைப்படுகின்றன. அதாவது மற்றொரு உயிரினத்தின் உயிரணுக்களில் உட்புகுந்து, அவற்றின் பொறிமுறையைப் பயன்படுத்தி அவை தம்மைப் பெருக்கிக் கொள்கின்றன. இதனால் இவை ஒட்டுண்ணிகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.

எல்லா ஓம்புயிர் உயிரணுக்களுக்குள்ளும் (செல்கள் – cell) ஒரு வைரசால் உட்புகுந்துவிட முடியாது. செல்களின் வெளிச்சுவர் வைரஸ் உட்புகுவதை தடுத்துவிடும். படையெடுக்கும் எதிரிகளைத் தடுக்கும் கோட்டையைப் போல சுவர் செயலாற்றுகிறது.

வைரஸ் (உயிர்நுண்மம்) என்பது புரதங்கள், நொதிகள் மற்றும் மரபணு பொருட்களை கொண்ட மிகச்சிறிய தொற்று துகளாகும். இவை பாக்டீரியா போன்ற நுண்ணுயிகளை விட மிகச் சிறியவை.

ஆனால் எந்நேரமும் முற்றிலும் பூட்டி சீல் வைக்கப்பட்ட கோட்டை போல செல்கள் இருக்க முடியாது. செல்களின் எல்லா இயக்கத்துக்கும் ஆற்றலும், பல புரதப் பொருள்களும் தேவை. செல்களுக்கு தேவையான, சரியான புரதப்பொருள்கள் வந்து செல் சுவரை அடையும் போது சுவரின் மேல் அவற்றை பற்றி பொருந்தும் வகையில் திருகுவெட்டுப்புதிர் (Jigsaw puzzle) போன்ற ஏற்பிகள் இருக்கின்றன.

அந்த புரதங்களின் மேற்பகுதி பகுதி சாவி வடிவில் இருக்கும். செல்சுவற்றில் உள்ள ஏற்பியின் மேல் இந்த சாவி வடிவம் பொருந்தும்போது கதவு திறந்து புரதம் உள்ளே செல்ல முடியும். அதாவது சரியான அடையாள அட்டையோடு சரியான கைரேகையைக் காட்டினால் தான் உட்செல்ல முடியும்.

பாக்டீரியா முதல் மனிதன் வரை ஒவ்வொரு உயிரிலும் உள்ள உயிரணுக்களின் (செல்களின்) பாதுகாப்பு அம்சங்களும் வெவ்வேறானவை. அதாவது வெவ்வேறு பூட்டு – சாவிகள்.

ஒரு வைரஸ் செல்சுவற்றை ஊருடுவிச் செல்ல அது அந்த செல் ஏற்றுக்கொள்ளும் சரியான புரத வகையையும், ஏற்பியில் சரியாகப் பொருந்தும் வடிவத்தையும் கொண்ட சாவி முட்களை மேற்பரப்பில் கொண்டிருக்க வேண்டும். இது போலி அடையாள அட்டையையும், போலி கைரேகையையும் கொண்டு உள்ளே புகுவது போல.

எல்லா வைரஸ்களாலும் எல்லா உயிரணுக்களையும் தாக்கிவிட முடியாது. ஒரு குறிப்பான கோட்டைச் சுவருக்கு பொருத்தமான போலி கைரேகையும், அடையாள அட்டையையும் கொண்ட வைரஸ்களால் மட்டுமே அந்த சுவரை ஊடுருவ முடியும்.

அதனால் எல்லா வைரஸ்களுமே மனிதசெல்களில் உட்புகுவதில்லை. சில நூற்றுக்கணக்கான வைரஸ்கள் மட்டுமே மனித செல்களைத் தாக்குகின்றன. கொரோனா என்பது ஒரு வைரசின் பெயரல்ல. அது ஒரு குடும்பத்தின் பெயர். கொரோனா என்றால் லத்தீன் மொழியில் மகுடம்(கிரீடம்) என்று பொருள்.

கொரோனா என்பது ஒரு வைரசின் பெயரல்ல. அது ஒரு குடும்பத்தின் பெயர். கொரோனா என்றால் லத்தீன் மொழியில் மகுடம்(கிரீடம்) என்று பொருள். பந்து வடிவில் இருக்கும் கொரோனா வைரஸ்கள் மீது குறிப்பிட்ட புரதங்களால் ஆன கொம்புகள் உள்ளன.

இவை நுண்ணோக்கி வழியே பார்க்கும்போது மன்னர்கள் சூடிக்கொள்ளும் மகுடத்தைப் (கிரீடத்தைப்) போன்ற தோற்றத்தை தருகின்றன. இப்புரத முனைகளைக் கொண்டே விலங்குகள் மற்றும் மனித செல்களை ஊடுறுவி உள்நுழைகிறது. இக்குடும்பத்தில் மனிதர்களை தாக்கும் வைரஸ், பறவைகளை தாக்கும் வைரஸ், விலங்குகளை தாக்கும் வைரஸ் என பற்பல இனப்பிரிவுகள் உண்டு.

சில வகையான வைரஸ்கள் நேரடியாக மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுகின்றன. சில வைரஸ்கள் விலங்குகளிடமிருந்து மனிதருக்கு வந்து பின் மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுகின்றன. சில நேரங்களில் விலங்குகளைத் தாக்கக்கூடிய ஒரு வைரஸ் சடுதி மாற்றத்தால் ஏற்படும் பிறழ்வுகளின் (Random Mutations) மூலம் மனிதர்களை தாக்குபவையாக பரிணமித்து மனிதர்களை தாக்குகின்றன.

இந்த கொரோனா வைரசை சீனா உருவாக்கி பரப்பியுள்ளது; இல்லை அமெரிக்கா உருவாக்கி பரப்பியுள்ளது; இல்லை, இல்லை ரஷ்யா உருவாக்கி பரப்பியுள்ளது என்று பல சதிக் கோட்பாடுகள் வலம் வருகின்றன. ஆனால், இதுவரை ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரஸ்கள் எவையுமே புற உலகின் சூழலுக்கு தாக்குப் பிடிக்கவில்லை. அதிலும் எல்லா நாடுகளின் தட்பவெப்ப சூழலுக்கும் தாக்குப் பிடிக்கும் வைரஸை உருவாக்குவதென்பது அவ்வளவு எளிதானதும் அல்ல.

மரபணுவைப் படியெடுத்தல் (Genome sequencing) மூலம் வைரஸ், பாக்டீரியா முதல் பல்வேறு உயிரினங்களின் மரபணுவை படியெடுத்து மரபணு தொடரை ஒப்பிட்டு ஆய்வுகளைச் செய்கின்றனர். இந்தக் குறிப்பிட்ட கொரோனா வைரஸ் வவ்வால்களை தாக்கி வந்தது என்றும், சடுதி மாற்ற பிறழ்வுகள் (Random mutation) மூலம் மனிதனை தாக்கும் பரிணாமமடைந்துள்ளன என்றும் ஆய்வாளர்கள் மரபணுவை படியெடுத்தல் மூலம் நிரூபித்து விட்டனர்.

இந்தக் குறிப்பிட்ட கொரோனா வைரஸ் வவ்வால்களை தாக்கி வந்தது என்றும்,
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.