head


ராஜீவ்காந்தி நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி!

|Fri 22nd May 2020 10:30 AM|| Page Views: 1

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 29-வது ஆண்டு நினைவுதினமான நேற்று அவருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தி உள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரம் செய்த போது அவர் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். ராஜீவ்காந்தியின் 29-வது ஆண்டு நினைவுதினம் நாடு முழுவதும் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, ராஜீவ்காந்திக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுதினத்தையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று அதில் கூறப்பட்டது.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தனது தந்தை நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:- ராஜீவ்காந்தியை போன்ற அன்பான மற்றும் தன்னலமற்ற மனிதருக்கு மகனாக பிறந்ததில் நான் பெருமைப்படுகிறேன். ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, நாட்டை வளர்ச்சியின் பாதை நோக்கி ஊக்குவித்தார்.

தனது தொலைநோக்கு சிந்தனைகளால், இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கான சாத்தியமான எல்லாவற்றையும் செய்தார். அவரது நினைவுதினமான இந்த நாளில் அவரை நான் பாசத்தோடும், நன்றியுடனும் நினைவு கூர்கிறேன் என்று கூறியுள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.