head


ஐ.தே.க வேட்புமனு தாக்கலை இரத்து செய்ய முயற்சி!

|Sat 23rd May 2020 09:30 AM|Political| Page Views: 1

தோல்வி கிடைக்கும் என்ற அச்சத்தில், ஐக்கிய தேசிய கட்சி வேட்புமனு தாக்கலை இரத்து செய்ய முயற்சித்து வருவதாக என முன்னாள் நாடாளுமன்றம் உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக பிரிந்து இருப்பது அந்தக் கட்சிக்கு பாரிய தோல்வியே கிடைக்கும் என்பதால் மீண்டும் இரண்டு தரப்புகளும் ஒன்று சேர்ந்து தேர்தலில் போட்டிடுவதுக்காக முற்ச்சிக்கின்றார்கள். அதன் வெளிப்பாடே வேட்புமனு தாக்கலை இரத்து செய்ய வலியுறுத்துவதாகும்.

ஆகவே நீங்கள் செய்த தவறுகளை சரி செய்துகொள்ளுங்கள். முடிந்தளவு தேர்தலை விரைவாக நடத்த வேண்டும். கொரோனா தொற்று அபாயம் நாட்டில் குறைந்துள்ளது. தொற்றாளர்கள் குழு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைய தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள். 5000 ரூபா நிவாரணம் பாரிய சவால்களுக்கு மத்தியில் வழங்கி வருகிறோம். இதை எதிர்த்தரப்பு பலவிதமாக விமர்சித்து வருகிறார்கள். கடந்த ஆட்சி நிதியில் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

அந்த ஆட்சியில் மத்திய வங்கி பிணை முறி கொள்ளை அடித்து பாரிய வீழ்ச்சிக்கு மத்தியில் நாட்டை எங்களிடம் ஒப்படைத்தார்கள். கடன் பெற்று நிவாரணம் வழங்கும் சுழலில் எமது அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழலில் மக்களை பசியில் போடாமல் மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என தெரிவித்தார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.