head


வெலிசறை கடற்படை முகாம் கொரனோ தொற்று குறித்த விசாரணைகள்!

|Sat 23rd May 2020 09:50 AM|General| Page Views: 1

இலங்கையில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட வெலிசறை கடற்படை முகாம் குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சுகாதார அமைச்சின் விஷேட குழு, அதன் ஆரம்பகட்ட விசாரணைகளை தொடர்ந்து, அளித்த பரிந்துரைகளின் பிரகாரம், தற்போது வெலிசறை முகாமைச் சேர்ந்த அனைத்து கடற்படையினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் வெலிசறை முகாமிலிருந்து அழைத்து செல்லப்பட்டு பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டாயிரத்து 193 கடற்படையினர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக முப்படைகளின் பதில் தலைமை அதிகாரி, இராணுவ தளபதி சவேந்ர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.