head


பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில்; கலந்துரையாடல்!

|Sat 23rd May 2020 10:00 Am|Education| Page Views: 1

பாடசாலைகளை மீள திற்பது தொடர்பில் எதிர்வரும் 26 ஆம் திகதி சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நாட்டில் கொவிட் 19 தொற்று நோய் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அதனால் பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்ட செயலகத்தில் நேற்று (22) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.