head


பயணிகள் விமான விபத்து - 54 பேர் உயிரிழப்பு!

|Sat 23rd May 2020 10:15 AM|Crime| Page Views: 1

பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரம் என அழைக்கப்படும் கராச்சியில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விமானம் லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்தது. விமான நிலையத்திற்கு அருகில் உள்ள அதிக கூட்ட நெரிசல் கொண்ட குடியிருப்புப் பகுதியில் இந்த விமானம் விபத்துள்ளாகியுள்ளது. எனவே பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.

பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் இந்த விமானம் கராச்சியில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. தரையிறங்கும் சிறிது நேரத்திற்குள்ளாக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் 99 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோக்களிலிருந்து, விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து கரும்புகை சூழ்ந்துள்ளது தெரிகிறது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

விபத்து குறித்த தகவல் வந்தவுடன் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன் எனவே மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து விலகியிருக்குமாறு மக்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். பாகிஸ்தானில் ரம்ஜான் விடுமுறையின் முதல் நாளான இன்று பலர் தங்கள் குடும்பங்களை காண பயணம் மேற்கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து எந்த ஒரு தகவலையும் பாகிஸ்தான் அரசு வழங்கவில்லை. பாகிஸ்தானில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு விமான சேவை மீண்டும் துவங்கியிருந்தது.

விபத்தை நேரில் பார்த்த மருத்துவர் கன்வால் நசிம், மதியம் சுமார் 3 மணியளவில் வெடிச்சத்தம் கேட்டதாகவும், வெளியே வந்த பார்த்தபோது மசூதிக்கு பின்னாலும், பக்கத்து வீடுகளிலிருந்தும் கரும்புகை வந்திருந்ததாகவும் பிபிசியிடம் தெரிவித்தார்.

விபத்து நடந்த பகுதியில் வசிக்கும் கன்வால், சிலர் அலறும் சத்தத்தையும் கேட்டுள்ளார். சில நிமிடங்களுக்கு பிறகு போலீஸார் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். என்றும் அவர் கூறுகிறார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.