head


அமெரிக்காவில் வெள்ளப் பெருக்கு!

|Sat 23rd May 2020 10:40 AM|Natural Disaster| Page Views: 1

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பாரிய அழிவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மிச்சிகன் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், இரண்டு அணைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

கனமழையால் ஆறுகளில் அபாய அளவைத் தாண்டிய வெள்ளம் ஓடுவதன் காரணமாக, தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளன. இந்நிலையில் மிட்லேண்ட் கவுண்டியில் உள்ள ஈடன்வில் அணை மற்றும் சான்ஃபோர்ட் அணையில் உடைப்பு ஏற்பட்டமையைத் தொடர்ந்து, மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

100 ஆண்டுகளில் இல்லாத தொற்றுநோயுடன் அமெரிக்கா போராடிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது 500 ஆண்டுகளில் இல்லாத பெருவெள்ளத்தை மிச்சிகன் மாநிலம் எதிர்கொண்டிருப்பதாக மிச்சிகன் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் மாநில ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.