head


இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு தொடரும்!

|Wed 27th May 2020 09:15 AM|Political| Page Views: 2

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மொஹமட் முகமது சாத் அலிக், நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். இதன் போது, யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு சென்று, கல்லூரி நிர்வாகத்துடன் கலந்துரையாடியதுடன், விளையாட்டு உபகரணங்களை அன்பளிப்பு செயதுள்ளார்.

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தமது நாட்டில் இருந்த வேளையில், பாகிஸ்தானில் பற்றிக்ஸ் கல்லூரி மிகவும் பிரசித்தி பெற்றது என்பதற்கிணங்க, யாழ்ப்பாணத்தில், அதே பெயரில் இருக்கக் கூடிய எமது கல்லூரிக்கு விஜயம் மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பின் அடிப்படையில் கல்லூரிக்கு விஜயம் செய்தார் என, பத்திரிசியார் கல்லூரி முதல்வர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மொஹமட் முகமது சாத் அலிக், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு தொடரும் என தெரிவித்தார். எனக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை நினைத்து, நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். கடந்த 20 வருடங்களுக்குப் பின்னர், யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டேன்.

இன்றையதினம் வடக்கு மாகாண ஆளுனரைகூட நான் சந்திக்க முயற்சித்தேன். எனினும் அவர் கொழும்பில் நிற்பதால் சந்திக்க முடியவில்லை. யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியானது, இலங்கையின் கல்வி வளர்ச்சியில், முக்கிய பங்காற்றி வருகின்றது. விளையாட்டுத்துறை கல்வித்துறையிலும் பல சாதனைகளைப் படைத்து, பெருமை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக நேற்று பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டு, பாடசாலை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடியிருந்தேன். எனினும் அவர்களுக்கு எனது சந்தோஷமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்ததனால், பாடசாலைக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பாடசாலை புத்தகப்பை என்பவற்றை கையளித்திருக்கின்றேன்.

நாங்கள் இலங்கையை நேசிக்கின்றோம். இலங்கை மக்களை நேசிக்கின்றோம். எனினும், எனக்கு தனிப்பட்ட ரீதியில், இலங்கை மக்களிடையே ஒரு விருப்பம் இருக்கின்றது. இலங்கை பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவதற்காக, நாம் இலங்கை மக்களுக்கு எம்மால் ஆன அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கின்றோம்.

அதனொரு கட்டமாகவே, இன்றையதினம் நான் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றேன். எனினும் எமது உறவு தொடரும். இலங்கை மக்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தொடர்பு எப்போதும் தொடரும். என குறிப்பிட்டுள்ளார்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.