head


பிரிட்டனில் ஜூன் 15 ஆம் தேதி முதல் கடைகள் திறப்பு!

|Wed 27th May 2020 10:20 AM|General| Page Views: 2

பிரிட்டனில் ஜூன் 15 ஆம் தேதிக்குப் பிறகு கடைகள் திறக்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, ஜூன் 15 ஆம் தேதி முதல் வணிக நிறுவனங்கள், தனிநபர் கடைகள், சிறு அத்தியாவசியக் கடைகளைத் திறக்க உத்தரவிட்டுள்ளோம். பள்ளிகளைப் படிப்படியாகத் திறக்கக் கேட்டுக் கொண்டுள்ளோம். கரோனா வைரஸைத் தடுப்பதற்கு அரசு எடுக்கும் இரண்டாம் கட்ட முயற்சிகளில் பிரிட்டன் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஜூன் 8-ம் தேதி முதல் அயர்லாந்து தவிர்த்து, பிற நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வரும் பயணிகள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரிட்டன் உள்ளது. பிரிட்டனில் இதுவரையில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 36,914 பேர் பலியாகியுள்ளனர்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.