head


8 மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பலி - சீனாவில் சம்பவம்!

|Tue 23th Jun 2020 09:18 AM|General| Page Views: 1

சீனாவில் ஆற்றில் விளையாடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்களில் 8 பேர் ஆற்றுநீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சீனாவின் சிச்சுவான் மாகாணம் டோங்னன் நகரில் உள்ள ஆரம்பப் பாடசாலை மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த மாணவர்கள் பாடசாலைக்கு அருகிலுள்ள ஆற்றில் விளையாடிக்கொண்டிருந்த போது மாணவர்களில் ஒருவர் திடீரென ஆற்றில் மூழ்கியுள்ளார். இதையடுத்து அவனை காப்பாற்றுவதற்காக உடனிருந்த சக மாணவர்கள் 7 பேரும் ஆற்றில் குதித்தனர். ஆனால் அவர்களும் ஆற்றில் மூழ்கியுள்ளனர்.

சம்பவத்தையடுத்து அருகில் இருந்த அனைவரும் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டபோதும், 8 மாணவர்களும் சடலமாகவே மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.