head


இந்தியா - சீனா எல்லை மோதல் : பாதுகாப்புத் துறைக்கு இந்திய அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு!

|Tue 23th Jun 2020 09:20 AM|| Page Views: 1

இந்தியா - சீனா எல்லை மோதல் தீவிரமடைந்து வருவதையடுத்து தமது பாதுகாப்புத் துறையை பலப்படுத்த மத்திய அரசு அவசரக்கால நிதியாக 500 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

லடாக்கின் கிழக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன இராணுவம் ஊடுருவியதால் இரு நாட்டு இராணுவத்துக்கும் இடையே ஆயுதம் ஏந்தாத மோதல் ஏற்பட்டு வருகின்றது. இதன் உச்சமாக கடந்த 15ம் திகதி இந்திய-சீன படைகள் மோதிக்கொண்டன.

இதன் போது, சீன வீரர்கள் கற்கள் கம்பிகள் மற்றும் ஆணிகளால் ஆன இரும்பு ராடுகளால் தாக்கினார்கள். இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பதிலுக்கு இந்திய வீரர்களும் தாக்கியதில் 35க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது .

இதனையடுத்து, இந்திய எல்லைக்குள் அத்துமீறினால், ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்திய வீரர்களின் தியாகத்தை வீணாக்க விடமாட்டோம், அத்துமீறினால் பதிலடி கொடுக்க முழு சுதந்திரம் கொடுத்துள்ளோம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளதுடன் இவ்விடயம் குறித்து முப்படை தளபதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றார்.

இந்நிலையில், இந்திய பாதுகாப்புப் படையினரின் ஆயுத அமைப்பை விரிவுபடுத்தும் முயற்சியில், வெடிமருந்துகளையும் ஆயுதங்களையும் வாங்குவதற்கு அதிகாரம் அளிக்கும் கொள்முதல் திட்டத்திற்கு ரூ.500 கோடி வரை சிறப்பு நிதி அதிகாரங்களை அரசாங்கம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.