head


இந்தியாவில் உச்சத்தைத் தொட்ட கொரோனா: 4,10,461,பேர் பாதிப்பு!

|Tue 23th Jun 2020 09:35 AM|| Page Views: 1

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்து வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியிருக்கிறது.

அந்த வகையில் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தையும் தாண்டிவிட்டது, 2.27 இலட்சம் பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இந்தியாவில் மொத்த எண்ணிக்கை 4இலட்சத்து 10ஆயிரத்து 461 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 இலட்சத்து 27ஆயிரம் 756 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 254 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.