head


முகக்கவசம் அணியாத பல்கேரியப் பிரதமருக்கு அபராதம் விதிப்பு!

|Wed 24th Jun 2020 09:25 AM|General| Page Views: 1

முகக்கவசம் அணியாமல் பொது நிகழ்ச்சியில் பங்கு பற்றிய குற்றச்சாட்டில் பல்கேரிய பிரதமர் பொய்க்கோ போரிசோவுக்கு (Boyko Borissov) அபராதம் விதிக்கப்படவுள்ளதாக அந் நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்திவரும் கொரோனாத் தொற்றுக் காரணமாக பல்கேரியாவில் பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமுலில் உள்ளதோடு முக்கவசம் அணியாத மக்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் குறித்த பிரதமர் நேற்று அந்நாட்டின் ரிலா மனொஸ்டோரி நகரில் உள்ள ஒரு தேவாலயத்திற்குச் சென்று பிரார்த்தனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டார். எனினும் குறித்த நிகழ்வின் போது பிரதமரும் அவருடன் சென்ற அதிகாரிகள் பலரும் முகக்கவசம் அணியாமல் விதிகளை மீறியுள்ளனர்.

இதையடுத்து, கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அமுலில் உள்ள உத்தரவை மீறி முகக்கவசம் அணியாமல் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் பொய்க்கோ பொரிசோவ் உட்பட அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளதாகப் பல்கேரிய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந் நாட்டு சுகாதார அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் ”முகக்கவசம் அணியாமல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் உட்பட அனைவருக்கும் தலா 300 லிவ்ஸ் (இலங்கை மதிப்பில் சுமார் 32,000 ரூபா ) அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.