head


ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு கொரோனா!

|Thu 25th Jun 2020 09:30 AM|General| Page Views: 1

மெக்சிகோவில் சன் லூயிஸ் பொட்டோசி( San Luis Potosi ) மாநிலத்தில் உள்ள வைத்தியசாலையில் கடந்த 17 ஆம் திகதி 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை இளம் தாயொருவர் பெற்றெடுத்துள்ளார்.

பொதுவாக புதிதாகப் பிறந்த குழந்தைக்கு அதே நாளில் கொரோனாத் தொற்று ஏற்படுவது இல்லை. எனினும் குறித்த 3 குழந்தைகளுக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்படவில்லை. எனினும் அவர்கள் அறிகுறியற்று கொரோனாத் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்களா என்று கண்டறிய பரிசோதனை நடத்தப்படுகிறது.

மேலும் இக் குழந்தைகளுக்கு தாயின் கருப்பையில் இருந்தபோது, கர்ப்ப காலத்தில் தொப்புள் கொடி வழியாக கொரோனா வைரஸ் பரவியிருக்க முடியுமா? என்று மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.