head


சிரியாவின் பல பகுதிகளில் உள்ள தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

|Thu 25th Jun 2020 09:40 AM|Crime| Page Views: 1

சிரியாவில் உள்ள ஈரான் சார்பு ஆயுத குழுக்களின் தளங்களை இலக்குவைத்து இஸ்ரேல் பல தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரிய இராணுவமும்; இதனை உறுதிசெய்துள்ளது. இஸ்ரேலிய விமானங்கள் ஹமாமாகாணத்தில் உள்ள இராணுவநிலை மீது தாக்குதலை மேற்கொண்டன சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் தென்சிரியாவில் ஈராக் ஜோர்தானுடனான எல்லையில் உள்ள இராணுவநிலைகள் மீது ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

சிரியாவின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் உள்ள தளங்களே தாக்கப்பட்டுள்ளன, இந்த தளங்கள் முன்னரும் தாக்கப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் சார்பு ஆயுதகுழுக்களின் தளங்களே தாக்கப்பட்டுள்ளன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. இதேவேளை அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் முன்னெடுக்கும் நிழல் யுத்தத்தின் ஒரு பகுதியாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.