head


கொரோனாவுக்கு எதிராக போராடவும் நாடுகளிடையே ஒற்றுமை இல்லை – ஐநா பொதுச் செயலாளர்!

|Fri 26th Jun 2020 09:55 AM|General| Page Views: 1

உலகில், கொரோனா வைரஸ் தாக்கம், பாரிய மனித அழிவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிரான போரில், உலக நாடுகள் இடையே ஒற்றுமை இல்லை என, ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலின் ஆரம்பத்திலேயே, இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் எழுந்துள்ள மிகப் பெரிய சர்வதேச சவால் என்றும், கொரோனா தொற்றை எதிர்கொள்ள நாடுகளிடையே, உலகளாவிய போர் நிறுத்தம் வேண்டும் எனவும், ஏற்கனவே அன்டோனியோ குட்ரெஸ் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், மீண்டும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கொரோனாவுக்கு எதிரான போரில், உலக நாடுகள் இடையே ஒற்றுமை இல்லை என, கவலை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ், சீனாவில் ஆரம்பித்து, ஐரோப்பா, அமெரிக்கா என தற்போது தென் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு இல்லை.

கொரோனாவுக்கு எதிராக நாடுகள், ஒன்றிணைந்து போராடுவது மட்டுமன்றி, சிகிச்சைகள், பரிசோதனை வழிமுறைகள், தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்தல் என்பவற்றிலும், நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். என வலியுறுத்தியுள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.