head


இந்தியாவில் கொரோனாத் தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பு!

|Fri 26th Jun 2020 10:00AM|| Page Views: 1

ஆசியாவில் கொரோனா வைரஸால் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா பதிவாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், ஆசிய நாடுகளிலும் பெரும் மனித அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. ஆசிய நாடுகளைப் பொறுத்தமட்டில் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தைக் கடந்துள்ளது.

அதேவேளை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை அண்மிக்கிறது. ஆசிய நாடுகளில் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவையடுத்து, ஈரான், துருக்கி, பாகிஸ்தான் போன்ற நாடுகள் உள்ளன என்பதுடன், இலங்கை 31ஆவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் இந்த வைரஸ் காரணமாக நேற்று ஒரே நாளில் 16 ஆயிரத்து 870 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 4 இலட்சத்து 72 ஆயிரத்து 985இற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

அதேவேளை இவ்வைரஸ் தொற்றினால் நேற்று 424 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 907 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த வைரஸ் தொற்றிலிருந்து இதுவரையில், 2 இலட்சத்து 71 ஆயிரத்து 688 பேர் குணமடைந்துள்ளனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.