head


அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு!

|Fri 26th Jun 2020 10:05 AM|Political| Page Views: 1

இந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக அந்த நாட்டிலிருந்து வெளிவரும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார். அந்நாட்டின் றியல் கிளியர் பொலிரிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் ஜோ பிடனுக்கு 51 சதவீத ஆதரவும், ட்ரம்பிற்கு 40.9 வீத ஆதரவும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8.1 வீதமானோர் யாருக்கும் வாக்களிக்கலாம் என்ற நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோ பிடன் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதி தெரிவாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.