head


சீன இராணுவத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்கா தயாராகி வருகிறதாம்!

|Sat 27th Jun 2020 09:35 AM|General| Page Views: 1

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, உலக அளவில் படைகளை நியமிக்க, அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். ஜேர்மன் மார்ஷல் நிதியத்தின், 2020 பிரஸ்ஸல்ஸ் மன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

“இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாடுகளுக்கு, சீனாவால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு, மக்கள் விடுதலை இராணுவத்தை எதிர்ப்பதற்கு, தகுந்த முறையில் எதிர்ப்பை காட்டிக்கொள்வதை உறுதி செய்வதற்காக, அமெரிக்கா, தனது உலகளாவிய படைகளை மறுஆய்வு செய்து வருகிறது.

சீனாவின் பி.எல்.ஏ இராணுவ அச்சுறுத்தலை எதிர்கொள்ள, நாங்கள் சரியான நிலையெடுக்க பரிசீலித்து வருகிறோம். காலத்தின் சவால்களை, நாங்கள் சிந்தித்து வருகிறோம். எனவே அச்சுறுத்தலை எதிர்கொள்ள, போதிய படை வளங்கள், நம்மிடையே உள்ளதாகக் கருதுகிறேன்.

இந்தப் பரிசீலனை, ஜனாதிபதி ட்ரம்ப்பின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் அங்கமாக, ஜேர்மனியில் தன் படைகளை 52 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக குறைக்க திட்டமிட்டுள்ளது. அமெரிக்க படைப்பலம் குறைக்கப்படும் நாடுகள், தங்களுக்கான பாதுகாப்பை தாங்களே வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அப்போதுதான், புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள பகுதிகளில், சீன இராணுவத்தை எதிர்கொள்ள, அங்கு படைப்பலத்தைக் கூட்ட முடியும். இது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுடன் முழு ஆலோசனைகளை மேற்கொள்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.