head


இந்தியாவில், டெல்லியில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள்!

|Sat 27th Jun 2020 09:38 AM|| Page Views: 1

இந்தியாவில், கொரோனா வைரசால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில், டெல்லி முதலிடத்திற்கு வந்துள்ளது. டெல்லியில் முதல் கொரோனா வைரஸ் தொற்று, கடந்த மார்ச் 2 ஆம் திகதி கண்டறியப்பட்டது. ஆனால், மும்பையில் மார்ச் 11 ஆம் திகதிதான் கண்டறியப்பட்டது.

அந்த மாத இறுதிக்குள், மும்பையில் 151 பேரும், டெல்லியில் 97 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த மே மாத இறுதி வரை கூட, மும்பையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, கணிசமாக உயர்ந்து வந்த நிலையில், கடந்த 23 நாட்களாக, கொரோனா பரவல் அங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், கொரோனா வைரசால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில், டெல்லி முதலிடத்திற்கு வந்துள்ளது.

இந்தியாவில், கொரோனா வைரசால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில், டெல்லி முதலிடத்திற்கு வந்துள்ளது. இந்தியாவில், கொரோனா வைரசால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில், டெல்லி முதலிடத்திற்கு வந்துள்ளது. ஆனால் தலைநகர் டெல்லியிலோ, கடந்த 23 நாட்களாக, கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

டெல்லியில், நாள் ஒன்றுக்குப் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, 3 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது. இதனால், அங்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 70 ஆயிரத்து 390 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 69 ஆயிரத்து 598 ஆக உள்ளது. ஆனால் இறப்பு எண்ணிக்கையில், மும்பையே முதலிடத்திலுள்ளது.

அங்கு 4 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், டெல்லியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 365 ஆகவே உள்ளது. டெல்லியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு, நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை, 19 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

பரிசோதனையை அதிகப்படுத்தியதே, அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்படக் காரணம் என, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அத்துடன், கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால், டெல்லியிலுள்ள, உள் விளையாட்டு அரங்குகள், கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.