head


இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 இலட்சத்தைக் கடந்துள்ளது!

|Sun 28th Jun 2020 09:42 AM|| Page Views: 1

உலகளாவிய ரீதியில், கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டியது.

நேற்று இரவு வரையான நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 5 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்காளம், தமிழகம் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை தொடர்ந்து நான்காம் இடத்தில் இந்தியா உள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.