head


ஸ்கொட்லாந்தில், ஹோட்டல் ஒன்றில் மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலி!

|Sun 28th Jun 2020 09:45 AM|Crime| Page Views: 1

ஸ்கொட்லாந்தில் சொகுசு ஹோட்டல்; ஒன்றில் மர்ம நபர் நடத்திய கத்திக் குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள்; வெளியாகியுள்ளன. இங்கிலாந்தின் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் மேற்கு ஜோர்ஜ் தெரிவில் சொகுசு ஹோட்டல்; ஒன்று உள்ளது.

அந்த ஹோட்டல்pல்; வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் நேற்று தங்கள் வழக்கமான வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த ஹோட்டலுக்குள் திடீரென்று கத்தியுடன் நுழைந்த மர்ம நபர் அங்கு இருந்தவர்கள் மீது கத்தியால் கண்மூடித்தனமாக கொலைவெறித் தாக்குதல் நடாத்தினார். இதனால், அந்த ஹோட்டலில் இருந்தவர்கள் அனைவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர்.

மர்ம நபர் அலறியடித்துக்கொண்டு ஓடிய மக்களை குறிவைத்து கொடூரமாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற பொலிஸார் தாக்குதல் நடத்திய சந்தேக நபரை சுட்டுக்கொன்றனர். மர்ம நபர் நடத்திய இந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததுடன், மேலும், 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.