head


மலாவியில் ஜனாதிபதி தேர்தலுக்கான மறு வாக்கெடுப்பில் எதிர்க்கட்சித் தலைவர் வெற்றி!

|Mon 29th Jun 2020 09:25 AM|Political| Page Views: 1

மலாவியின் எதிர்க்கட்சித் தலைவர் லாசரஸ் சக்வேரா, ஜனாதிபதி தேர்தலுக்கான மறு வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் லாசரஸ் சக்வேரா ஜனாதிபதியாக நேற்று (28) கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த வாக்கெடுப்பில் அவர் 58.57 வீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், மலாவியின் நீதிமன்றம், 2019 மே மாதம் இடம்பெற்ற தேர்தலில் வாக்கு மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி முத்தரிக்காவின் வெற்றியை ரத்து செய்தது. 2017 ஆம் ஆண்டு கென்யாவுக்குப் பின்னர், முறைகேடுகள் தொடர்பாக ஜனாதிபதித் தேர்தலை ரத்து செய்த இரண்டாவது ஆபிரிக்க நாடாக மலாவி காணப்படுகின்றது. இந்நிலையில் நேற்றைய தினம் வெளியான உத்தியோகபூர்வ முடிவைத் தொடர்ந்து, தனது வெற்றி ஜனநாயகம் மற்றும் நீதிக்கான வெற்றி என சக்வேரா கூறினார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.