head


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது!

|Mon 29th Jun 2020 09:30 AM|General| Page Views: 1

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலக அளவில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1 கோடியைக் கடந்துள்ளது.

உலக அளவில் மேலும் 5,043 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1,00,80,158 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா வைரசால் 636 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை தற்போது 5,01,262 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 54,57,898 பேர் குணமடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும் இரண்டாவது இடத்தில் பிரேசிலும் மூன்றாவது இடத்தில் ரஸ்யாவும் உள்ளன.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.