head


இந்தியாவில் 6 நாளில் ஒரு இலட்சம் பேருக்கு தொற்று!

|Mon 29th Jun 2020 09:30 AM|| Page Views: 1

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 21 ஆம் திகதி 4 இலட்சத்து 10 ஆயிரம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று 5 இலட்சத்து 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதன் மூலம் 6 நாட்களில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் 110 நாட்களில் ஒரு லட்சம் பேர் கொரோனா பாதிப்பிற்குள்ளாகினர். ஆனால், தற்போது 39 நாட்களிலேயே 4 இலட்சம் பேர் வரை கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக இம்மாதம் முதலாம் திகதியில் இருந்து நேற்று வரை மட்டும் 3 இலட்சத்து 18 ஆயிரத்து 418 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிடப்பட்ட புள்ளிவிபரப் பட்டியலில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 18 ஆயிரத்து 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 881 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்மியுள்ள நிலையில், ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 387 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.