head


எதிர்வரும் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கும் - ஜி.எல்.பீரிஸ்!

|Tue 30th Jun 2020 09:00 AM|Political| Page Views: 1

எதிர்வரும் தேர்தலில், பெரும்பான்மை கிடைக்கும் என்பதில், எவ்வித ஐயமும் இல்லை என, சிறிலங்கா பொதுஜன பெரமுன தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று (29), கொழும்பில் பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

“ஐக்கிய மக்கள் சக்தியானது, அரசாங்கத்தை அமைக்க மக்களிடம் வாக்குகளை கேட்கின்றது. இவர்களால் அமைக்கப்படுவது எவ்வாறானதொரு அரசாங்கமென எம்மால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. காரணம் நிகழ்கால அரசாங்கத்திலும் பார்க்க, ஆயிரம் மடங்கு மோசமான ஒரு அரசாங்கமாகவே இருக்கும். நாம் பத்திரிகை செய்திகளில் காண கிடைத்தது. அதாவது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் மன்னிப்பு வேண்டியிருந்தார். இந்நிலையில், ஹரின் பெர்னாண்டோ தம் கூறிய கருத்துக்கள் குறித்து, தமது வருத்தத்தை தெரிவித்தார்.

அதாவது தான் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை குறித்து வெளியிட்ட தகவல்கள், உண்மைக்கு புறம்பானதென ஒப்புக்கொண்டுள்ளார். அவரே அவரின் வாயினால், உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். மற்றுமொரு பத்திரிகையில், ஹரின் இனிமேல் இது குறித்து எதுவும் பேச போவதில்லையென விபரிக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் நிலை இவ்வாறிருக்கையில், இவர்களினால் எப்படி மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும், ஒரு சிறந்த ஆட்சியை நிலை நிறுத்த முடியும்.

தற்போது அனைத்து பொது தேர்தல் கட்சிகளும், தமது பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஆனாலும் மக்களுக்கான தெளிவான திட்டங்களை அமைத்துள்ள எமது கட்சியும், ஓரளவான பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளது. இது மாத்திரமல்லாது எமது திட்டங்களும், ஆங்காங்கே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களை, தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்லவே, நாம் மக்களிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையாய் கேட்கின்றோம். இந்த பெரும்பான்மை கிடைக்கும் என்பதிலும், எமக்கு எவ்வித ஐயமும் இல்லை.” என குறிப்பிட்டுள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.