head


பொதுத் தேர்தலில் 75 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுவர்!

|Tue 30th Jun 2020 09:05 AM|Political| Page Views: 1

பொதுத் தேர்தலில் 75 ஆயிரம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் கடமையில் ஈடுபடுத்த பொலிஸ் பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. தேர்தல் காலத்தில் இலங்கை சிவில் பாதுகாப்பு படையிலிருந்து சுமார் 10 ஆயிரம் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

நேற்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வரவிருக்கும் தேர்தல் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க நடத்தப்படும் என்பதால் பொலிஸார், தேசிய தேர்தல் ஆணைக்குழுவுடனான கலந்துரையாடலின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என கூறினார்.

மேலும் 2020 பொதுத் தேர்தல் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க நடைபெறுவதை உறுதி செய்வது பொலிஸாரின் பொறுப்பாகும் என்றும் இது குறித்த அறிவிப்பு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 09 ஆவது நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.