head


எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதிக்கு மக்கள் பலம் கிடைக்க வேண்டும்: விமல் வீரவன்ச!

|Tue 30th Jun 2020 09:10 AM|Political| Page Views: 1

கொரோனா வைரஸ் தாக்கத்தை தனியாக வெற்றி கொண்ட ஜனாதிபதிக்கு, இன்னும் மக்கள் பலம் கிடைப்பின், மென்மேலும் நாட்டை முன்னோக்கிச் செல்ல முடியும் என சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நேற்று (29), கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது: “கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதில் நாம் வெற்றி அடைந்துள்ளோம். நேற்று வரை இரவு நேரங்களில் மட்டும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம், தற்போது முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கை நிலையும், மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளது.

சுகாதார வைத்திய ஆலோசனைகளுக்கு இனங்க, தேர்தலும் நடத்த தீர்மானிக்கப்பட்டு, அவற்றுக்கான வேலைத் திட்டங்களும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு, புதிய நாடாளுமன்றம் ஒன்றை நியமிக்க, தமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். கடந்த காலங்களில் பரவிய, கொரோனா வைரஸ் தாக்கத்தை, உலகலாவிய அளவில், பல நாடுகளிலும் வெற்றி கொள்ள முடியதொரு நிலை ஏற்பட்டது.

வளர்ச்சியடைந்த நாடுகளாகிய, அமெரிக்க, ஐரோப்பா திண்டாடின. ஆனால், எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பல சுகாதார நடவடிக்கைளை மேற்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தி மீண்டும் எமது நாட்டையும் மக்களின் வாழ்க்கை நிலையையும் முன்னோக்கி கொண்டு வந்திருக்கிறார். ஆனாலும் ஜனாதிபதியின் குறித்த செயற்பாடுகள், நாட்டில் ஒரு நாடாளுமன்றம் இல்லாமலேயே முன்னெடுக்கப்பட்டன. நேற்று (29) மக்கள் அனைவருக்கும், ஒரு விடயம் நன்றாக தெளிவாகியுள்ளது.

உலகவிய அளவில் வெற்றி கொள்ள முடியாத இந்த வைரஸ் பரவலை, எவ்வித பலமும் நேற்று (29), ஜனாதிபதியால் வெற்றி கொள்ள முடியுமாக இருப்பின், மக்களின் பலமும் ஆதரவும் இருப்பின், மென்மெலும் அவரால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.” என குறிப்பிட்டுள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.