head


பாடசாலைகள் நேற்று திறக்கப்பட்டுள்ளன!

|Tue 30th Jun 2020 09:20 AM|Education| Page Views: 1

நாடளாவிய ரீதியில் பாடசாலைகள், கல்வியமைச்சின் ஆலோசனைக்கு அமைய மீளவும் திறக்கப்பட்ட நிலையில், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி கடமைகளுக்கு சமூகமளித்தை அவதானிக்க முடிந்தது. நாடளாவிய ரீதியில், கொரோனாத் தொற்று அச்சம் காரணமாக பாடசாலைகள் கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி மூடப்பட்டன.

நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று (29) நான்கு கட்டங்களாக பாடசாலைகளை திறப்பதற்கு கல்வியமைச்சு அனுமதியளித்திருந்தது. இதன்படி முதலாவது கட்டமாக பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் பாடசாலைக்கு சமூக மளித்திருந்தனர். எதிர்வரும் 6ஆம் திகதிக்கு பின்னரே கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கான முன்னேற்பாடுகளில் நேற்று (29) முதல் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள். மலையக பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு சமூகமளித்திருந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைப்பிடித்து, முகக் கவசங்களை அணிந்து வருகைதந்திருந்தனர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.