head


தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முக்கிய கூட்டம்!

|Tue 30th Jun 2020 09:22 AM|Political| Page Views: 1

தேர்தல்கள் ஆணைக்குழுவில் முக்கிய கூட்டமொன்று இன்று (30) இடம்பெறவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவில் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெறும் இந்த கூட்டத்தில் ஆணைக்குழுவின் மேலும் சில உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது குறித்து இக்கூட்டத்தில் இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு ஒரு மணித்தியாலம் மேலதிகமாக வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை இது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.