head


புதுக்குடியிருப்பில் கிணற்றுக்குள் இறங்கிய இருவரில் ஒருவர் உயிரிழப்பு!

|Tue 30th Jun 2020 09:25 AM|General| Page Views: 1

முல்லைத்தீவு நேசன் குடியிருப்பு முதலாம் வட்டாரத்தில், கிணற்றுக்குள் இறங்கிய இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட, நேசன் குடியிருப்பு முதலாம் வட்டாரத்தில், கடும் வறட்சி காரணமாக, மக்களின் கிணறுகளில் நீர் வற்றி காணப்படுகின்றது.

இந்த நிலையில், குறித்த பகுதியில் உள்ள வீட்டுக் கிணறு ஒன்றை ஆழப்படுத்துவதற்காக, நேற்று (29) காலை கிணற்றுக்குள் இறங்கிய இருவரில், ஒருவர் அமுக்கம் காரமாண மயங்கிய நிலையில் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய நபர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் போது, புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த, 29 அகவையுடைய செ.திலகச்செல்வன் என்ற, இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

அத்துடன், 24 வயதுடைய ஆ.றதுர்யன் என்ற இளைஞன், மயக்கமடைந்த நிலையில், அருகில் உள்ளவர்களால் மீட்கப்பட்டு, முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.