head


பங்களாதேஷில், படகு விபத்திற்குள்ளானதில் 23 பேர் உயிரிழப்பு!

|Tue 30th Jun 2020 09:30 AM|General| Page Views: 1

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில், படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் மேற்கு டாக்காவில், புரிகங்கா ஆற்றில் படகு கவிழ்ந்த போது, படகில் சுமார் 50 பயணிகள் இருந்தனர் என, தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இறந்தவர்களில் 6 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் அடங்குகின்றனர் என்றும், சிலர் பாதுகாப்பாக கரைக்கு நீந்தி வந்த போதும், பலரை காணவில்லை எனவும், அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர், இதுவரை, நாங்கள் 23 சடலங்களை மீட்டுள்ளோம், காணாமல் போனவர்களைத் தேடி வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார். விரிவான உள்நாட்டு நீர் வழிகளைக் கொண்ட ஒரு தாழ்வான நாடான பங்களாதேஷில், ஒவ்வொரு ஆண்டும், நூற்றுக்கணக்கான மக்கள், படகு விபத்துக்களில் உயிரிழப்பதாக, தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.