head


அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்கள்!

|Tue 28th July 2020 11:00 AM|| Page Views: 1

மும்பை, கொல்கத்தா, நொய்டாவில்அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார் இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் ஐ.சி.எம்.ஆர். (இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்) மராட்டியத்தின் மும்பை, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா மற்றும் உத்தர பிரதேசத்தின் நொய்டா ஆகிய 3 இடங்களில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை அமைத்துள்ளது.

இந்த மையங்களை காணொளி காட்சி மூலமாக பிரதமர் நரேந்திரமோடி நேற்று (திங்கட்கிழமை) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், முதல்வர்கள் உத்தவ்தாக்கரே (மராட்டியம்), மம்தா பானர்ஜி (மேற்குவங்காளம்), யோகி ஆதித்யநாத் (உத்தரபிரதேசம்) ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த அதிவிரைவு பரிசோதனை மையங்களில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியும் என்றும், எச்.ஐ.வி., டெங்கு உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்படும் என்றும் பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.