head


பன்னாட்டுச் சட்டத்தின் போர்வையில் அமெரிக்கா லாபம் ஈட்டுகிறது!

|Thu 30th July 2020 10:20 AM|Political| Page Views: 1

பன்னாட்டுச் சட்டத்தைக் காக்கிறோம் என்ற போர்வையில் அமெரிக்கா எப்போதும் லாபம் ஈட்டி வருகிறது என, சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வெங்பின் தெரிவித்துள்ளதாவது. அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோ, தென் சீனக் கடல் பகுதி, சீன ராஜாங்கத்துக்கு உட்பட்டது கிடையாது எனத் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டார்.

இதுகுறித்து, சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வெங்பின் தெரிவித்துள்ளதாவது: மைக் பாம்பியோ பன்னாட்டுச் சட்டம் பற்றி மிக அதிகமாகப் பேசுகிறார். ஆனால் உலகிலுள்ள அனைவருக்கும் தெரியும், பன்னாட்டுச் சட்டத்தை மதிக்கிறோம் என்ற போர்வையில், அதை காலில் போட்டு மிதித்து, தன்னல லாபங்களை அடைவதுதான் அமெரிக்காவின் நோக்கம் என்று.முதலில், பன்னாட்டுச் சட்டம் என்பதை ஆயுதமாக்கும் அமெரிக்கா, அதை தேர்ந்தெடுத்த விதத்தில் பயன்படுத்தி, சுயலாபம் அடைந்து வருகிறது. அமெரிக்கா இதுவரை 10 பன்னாட்டு ஒப்பந்தங்கள், அமைப்புகளிலிருந்து வெளியேறியுள்ளது.

தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்க போர் விமானம் 2,000த்துக்கும் மேற்பட்ட முறை போர்ப்பயிற்சிகளை மேற்கொண்டதை உலகு அறியும். ஜூலை 15 முதல் தென் சீனக் கடலில் 12 நாட்களுக்குத் தொடர்ச்சியாக அமெரிக்க போர் விமானம் பறந்துள்ளது. பாம்பியோவிடம் தெரிவிப்பது என்னவெனில் தென் சீனக் கடல் என்பது ஹவாய் அல்ல.

இவ்வாறு அவர் எதிர்வினையாற்றியுள்ளார். இந்த கருத்தால் அமெரிக்கா - சீனா இடையேயான மோதல் மேலும் வலுப்பெறும் என, அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.