head


உதவியாளருக்கு கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்டார் கவர்னர்!

|Thu 30th July 2020 11:00 AM|| Page Views: 1

உதவியாளர் தாமஸ் மற்றும் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து டாக்டர்களின் அறிவுரைப்படி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், 7 நாட்கள் தனிமைபடுத்தி கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழக கவர்னர் மாளிகையில் பணியாற்றிய 147 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 84 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து, அங்கு கிருமி நாசினி தெளித்து தூய்மைபடுத்தப்பட்டது. இந்நிலையில், கவர்னர் உதவியாளர் தாமஸ் உட்பட 3 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இருப்பினும், கவர்னர் பன்வாரிலால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கவர்னர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா உறுதியானதால், பன்வாரிலாலை 7 நாட்கள் தனிமைபடுத்தி கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுரை வழங்கினர். இதனையடுத்து அவர் தனிமைபடுத்தி கொண்டார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.