head


கொரோனாவுடன் இனி மக்கள் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்!

|Fri 31st July 2020 09:50 AM|General| Page Views: 1

மக்கள் இனி கொரோனாவுடன் தான் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என உலக சுகாதர அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார். சீனாவில் பரவத்துவங்கிய கொரோனா வைரஸ், ஜூலை.30ம் தேதி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 72 லட்சத்து , ஆயிரத்து, 277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 7 லட்சத்து 16 ஆயிரத்து 271 பேர் மீண்டுள்ளனர்.

இந்நிலையில் ஜெனிவா நகரில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியது, உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

கொரோனா பாதிப்பால் மனிதனின் வாழ்கை முடிந்துவிட்டதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. மக்கள் இனி கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.