head


தீவிர ராணுவ பயிற்சியில் சீனா!

|Fri 31st July 2020 10:00 AM|Defence| Page Views: 1

தென் சீன கடற்பகுதியில் தீவிர ராணுவ பயிற்சியில் சீனா ஈடுபட்டது. இது குறித்து அந்நாட்டு பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் ரென் குவோகியாங் தெரிவித்ததாவது, 'கடந்த செவ்வாயன்று ஆசிய பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து காணப்பட்டது. சீனா தனது ராணுவ பலத்தை அதிகரித்துள்ளது பல நாடுகளை நிம்மதி இழக்கச் செய்துள்ளது.

சீனாவின் எச்-6ஜி மற்றும் எச்-6ஜே ஜெட் போர் விமானங்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. மேலே பாய்தல், தரை இறங்குதல், தொலை தூர தாக்குதல் போன்ற தீவிர பயிற்சியில் விமானங்கள் ஈடுபட்டுள்ளன. இப்பயிற்சிகள் சீனாவின் வழக்கமான ஒன்று. இதன் மூலம் எதிர்பார்த்த பலன்களை அடைய முடிந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.